எப்போதும் இந்தியாவில் மிகப் பெரும் பிரச்சினையாக இருப்பது சாதிய வாதம் மற்றும் மதவாதம் . அவை இரண்டும் இந்தியா என்னும் பன்முக தேசியத்தின் அஸ்திவாரத்தை அசைத்து பார்த்திருக்கிறது. அதற்கு உதாரணமாக இந்தியா பாகிஸ்தான் பிரிவினை, இந்தியாவின் ஆன்மாவை சிதைத்த பாப்ரி மஸ்ஜித் இடிப்பு, குஜராத் இனப்படுகொலை, மற்றும் பல சாதிய கொடுமைகள் இந்த நாடு முழுவதும் பேசு பொருளானது. இவை இரண்டும் இன்றைக்கு இந்தியாவில் அடுத்த கட்ட வடிவம் எடுத்துள்ளது கும்பல் படுகொலை என்னும் பெயரில் வகுப்புவாதம் புது வடிவம் எடுத்துள்ளது. . இதனால் நாம் பெருமைப்படும் வேற்றுமையில் ஒற்றுமை (unity in diversity) என்னும் பண்பாட்டிற்கும் மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் மதச்சார்பற்ற கொள்கைக்கும் ஆபத்து ஏற்படும் தடசூழ்நிலை உருவாகியுள்ளது. அதன் எதிரொலியாக இந்த ஐந்து ஆண்டுகள் இந்தியாவில் மதம் சார்ந்த படுகொலைகள் அதிகரித்துள்ளது அதிலும் குறிப்பாக மாட்டிறைச்சி உணவிற்காகவும் மற்றும் இந்து மத கோஷம் சொல்லக் கோரி நடந்த படுகொலைகள் நடப்பது வேதனைக்குரியது. இதனை கண்டித்து ஒடுக்க வேண்டிய அரசு அதை செய்யாமல் இரு...