கடந்த சில வாரங்களாக ஊடகங்களை மறுபடியும் ஆக்கிரமித்திருக்கிறது, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்.அந்த பல்கலைகழக நிர்வாகம் கொண்டு வந்த விடுதி கட்டண வரைவு அறிக்கை தான்,இந்த போராட்டத்திற்கு மிகப் பிரதான காரணம்.அந்த வரைவு அறிக்கையில் விடுதி கட்டணம் 300 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது.இதையொட்டி மாணவர்கள் துணைவேந்தரை சந்திக்க முயன்றனர்,ஆனால் துணைவேந்தர் மாணவர்களை சந்திக்க முன்வரவில்லை.இதனை கண்டித்து மாணவர்கள் பல்கலைகழக வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.இதன் ஒரு பகுதியாக கல்வியை தனியார்மயமாக்குதல் மற்றும் விடுதி கட்டண உயர்விற்கு எதிராக மாணவர்கள் பாராளுமன்றத்தை நோக்கி சென்றனர்.அதை தடுப்பதற்கு டெல்லி காவல்துறை 144 தடை உத்தரவு பிறப்பிதித்தது.தடையை மீறி மாணவர்கள் பேரணி நடத்தினார்கள்.இப்பேரணியில் மாணவர்கள் மீது டெல்லி காவல்துறை மிக மூர்க்கமாக தாக்கியது,இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதையடுத்து சமூக வலைதளமான ட்விட்டரில் #Emergencyinjnu என்ற ஹேஷ்டேக் நாடு முழுக்க பரவியது.ஜே.என்.யூ. மாணவர்கள் போராட்டம் பற்றியும், அதன் பின்னால் கல்வி கட்டமைப்பு சிதைக்கப...
எப்போதும் இந்தியாவில் மிகப் பெரும் பிரச்சினையாக இருப்பது சாதிய வாதம் மற்றும் மதவாதம் . அவை இரண்டும் இந்தியா என்னும் பன்முக தேசியத்தின் அஸ்திவாரத்தை அசைத்து பார்த்திருக்கிறது. அதற்கு உதாரணமாக இந்தியா பாகிஸ்தான் பிரிவினை, இந்தியாவின் ஆன்மாவை சிதைத்த பாப்ரி மஸ்ஜித் இடிப்பு, குஜராத் இனப்படுகொலை, மற்றும் பல சாதிய கொடுமைகள் இந்த நாடு முழுவதும் பேசு பொருளானது. இவை இரண்டும் இன்றைக்கு இந்தியாவில் அடுத்த கட்ட வடிவம் எடுத்துள்ளது கும்பல் படுகொலை என்னும் பெயரில் வகுப்புவாதம் புது வடிவம் எடுத்துள்ளது. . இதனால் நாம் பெருமைப்படும் வேற்றுமையில் ஒற்றுமை (unity in diversity) என்னும் பண்பாட்டிற்கும் மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் மதச்சார்பற்ற கொள்கைக்கும் ஆபத்து ஏற்படும் தடசூழ்நிலை உருவாகியுள்ளது. அதன் எதிரொலியாக இந்த ஐந்து ஆண்டுகள் இந்தியாவில் மதம் சார்ந்த படுகொலைகள் அதிகரித்துள்ளது அதிலும் குறிப்பாக மாட்டிறைச்சி உணவிற்காகவும் மற்றும் இந்து மத கோஷம் சொல்லக் கோரி நடந்த படுகொலைகள் நடப்பது வேதனைக்குரியது. இதனை கண்டித்து ஒடுக்க வேண்டிய அரசு அதை செய்யாமல் இரு...